top of page
45. ஏசுவுக்காக நில்லும்
ஏசுவுக்காக நில்லும்
சிலுவை வீரர்கள்!
துகிற் கொடி விரித்து
போராட்டம் பண்ணுங்கள்;
எல்லோருக்கும் முன்பாக
ஏசு தாமே போவார்;
யுத்தத்தில் ஜெயம்பெற
நம்மை நடத்துவார்
ஏசுவுக்காக நில்லும்,
அவர் இல்லாமலே
போர்க்களத்தில் வீணாக
முயற்சி செய்வோமே
திவ்விய ஆயுதத்தைத்
தரித்துக் கொள்ளுங்கள்
அவர் போகுமிடத்தில்
எங்கும் பின் செல்லுங்கள்
ஏசுவுக்காக நில்லும்
அவர் சொல் கேளுங்கள்;
எதைக் கற்பிக்கிறாரோ
அதையே செய்யுங்கள்
பகைஞருக்குப் பெலன்
பெரிது என்றாலும்;
தைரியம் விடாதேயுங்கள்
ஜெயம் பெறுவீரே
ஏசுவுக்காக நில்லும்,
யுத்தம் சுருக்கத்தான்;
இன்றைக்கு ஆரவாரம்,
நாளைக்கு வெற்றிதான்;
வென்றோனுக்குக் கிரீடம்
கர்த்தர் கொடுப்பாரே;
சொல்லாடங்கா ஆனந்தம்
அவரால் ஆகுமே
bottom of page