top of page
46. ஏசுவைப் பாடுவோம்
ஏசுவைப் பாடுவோம்,
இனிதாய்ப் பாடுவோம்
எண்ணில்லா நன்மைகள்
செய்வதால் பாடுவோம்
போஷிப்பதால் பாடுவோம்
நேசிப்பதால் பாடுவோம்
சுவாசிப்பதால் பாடுவோம்
சுகராகம் பாடுவோம்
கீழாக்காமல் மேலாக்குவேன்
என்பதாலே பாடுவோம்
வாலாக்காமல் தலையாக்குவேன்
என்பதாலே பாடுவோம்
நன்றி சொல்லிப் பாடுவோம்
நா வலிக்கப் பாடுவோம்
நடனமாடிப் பாடுவோம்
நாள் முழுக்கப் பாடுவோம்
பாவங்களை மன்னிப்பதால்
மகிழ்வுடனே பாடுவோம்
வியாதிகளை விளக்குவதால்
வீறுகொண்டுப் பாடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
ஆனந்தமாய் பாடுவோம்
துதிகீதம் பாடுவோம்
ஸ்தோத்திரம் பாடுவோம்
சீக்கிரமாய் வருவேனென்று
சொன்னவரைப் பாடுவோம்
ஆம் கர்த்தாவே வருமென்று
சொல்லி சொல்லிப் பாடுவோம்
வந்ததாலே பாடுவோம்
வருவதாலே பாடுவோம்
வானவரைப் பாடுவோம்
வாழ்த்தியே பாடுவோம்
bottom of page