47. இதோ உன் ராஜா வருகின்றார்

இதோ உன் ராஜா வருகின்றார் 

மேகங்களுடனே வருகின்றார்

ஆயத்தமா? ஆயத்தமா?


அறுப்புக்காலம் சென்றது,

கோடைக்காலம் வந்தது 

ஆயத்தமா? நீ ஆயத்தமா?

இது கிருபையின் காலம்,

இது தவனாயின் காலம் 

கிறீஸ்து ராஜன் 

உன்னை அழைக்கிறார் 


ராஜ வஸ்திரம் தரித்தவர் 

ஆயிற்று என்று சொல்கிறார் 

ஆயத்தமா? நீ ஆயத்தமா?

இனிக்காலம் செல்லாது;

கிறீஸ்து இராஜன் 

உன்னை அழைக்கிறார் 


தூதரோடு வருகின்றார்,

மகிமையோடும் வருகின்றார்,

ஆயத்தமா? நீ ஆயத்தமா?

உன் கிரியைகளின் பலனை 

உனக்குத் தர வருகின்றார்,

கிறீஸ்து இராஜன் 

உன்னை அழைக்கிறார்