top of page

48. தூய ஆவி அசைவாடி

தூய ஆவி அசைவாடி 

என் உள்ளத்தை நிரப்பும்;

உன்றன் திவ்ய சமூகத்தால் 

இப்போ வந்து நிரப்பும் 


நிரப்பும், நிரப்பும், இயேசு 

என்னை நிரப்பும்;

உன்றன் திவ்ய சமூகத்தால் 

இப்போ வந்து நிரப்பும் 


திவ்ய ஆவி நிரப்புவீர் 

எவ்விதம் என்றறியேன்;

உம்மை வேண்டி நாடுகிறேன்;

இப்போ வந்து நிரப்பும் 


முற்றும் பெலவீனனாகத் 

திருப் பாதம் பணிந்தேன்;

சுத்த நித்ய தேவ ஆவி 

வல்லமையால் நிரப்பும் 


கழுவி, இரட்சை செய்து,

என் உள்ளத்தை நிரப்பும்;

ஆற்றி ரட்சித் தென்னை இப்போ 

அன்பாய் நிரப்புகிறீர் 

bottom of page