top of page
49. விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே
விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைச்
சொந்த கரங்களால்
அணைத்துக் கொள்வார்
கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவைப் போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களி கூரு
விண் கைமாறு மிகுதியாகும்
bottom of page