top of page

50. ஏதேனில் ஆதி மணம்

ஏதேனில் ஆதி மணம்

உண்டான நாளிலே

பிறந்த ஆசீர்வாதம்

மாறாதிருக்குமே


இப்போதும் பக்தியுள்ளோர்

மணமும் தூய்மையாம்

தேவன் ப்ரசன்னமாவார்

மகத்வ வாழ்த்துண்டாம்


ஆதாமுக்கு ஏவாளை

அளித்த தந்தையே

இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை

அளிக்க வாருமே


நாதா! இந்நாளில் வந்து

இவ்விரு பேர் மீதும்

உம் செட்டையை விரித்து

அன்பாகக் காத்திடும் 


கிறிஸ்துவின் பாரியோடே

எழும்பும் வரைக்கும்

எத்தீங்கில் நின்றுங்  காத்து

பேர் வாழ்வு ஈந்திடும்

bottom of page