52. மங்களம் செழிக்க

மங்களம் செழிக்க கிருபையருளும் 

மங்கள நாதனே


மங்கள நித்திய மங்கள நீ! 

மங்கள முத்தியும் நாதனும் நீ! 

எங்கள் புங்க நீ, எங்கள் துங்கவ நீ! 

உத்தம, சத்திய, நித்திய, 

தத்துவ மெத்த மகத்துவ 

அத்தனுக்கத்தனாம் ஆப்ரகாம் தேவ நீ! 


மணமகன்……… அவர்களுக்கும் 

மணமகள்……… அம்மாளுக்கும் 

மானுவேலர்க்கும், மகானுபவர்க்கும், 

பக்தியுடன் புத்தி முத்தி 

அளித்திடும் நித்தியனே உன்னைத் 

துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்