top of page

53. மணவாழ்வு புவி வாழ்வினில்

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு 

மங்கள வாழ்வு - வாழ்வினில் வாழ்வு 

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு 

மருவிய சோபன சுப வாழ்வு. 


துணைபிரியாது தோகையிம்மாது 

சுபமணமகளிவர் இதுபோது 

மனமுறையோது வசனம் விடாது 

வந்தனர் உமதருள் பெறவேது? நல்ல 


ஜீவ தயாபரா! ஸ்ருஷ்டியதிகாரா! 

தெய்வீக மாமணவலங்காரா! 

தேவகுமாரா! திருவெல்லையூரா! 

சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா? நல்ல 


குடித்தன வீரம் குணமுள்ளதாரம் 

கொடுத்துக் கொண்டால் அது சமுசாரம் 

அடக்கம், ஆசாரம், அன்பு, உதாரம், 

அம்புவிதனில் மனைக்கலங்காரம். நல்ல 


மன்றல் செய்தேவி மணாளனுக்காவி 

மந்திரம் அவர்க்குரை மேதாவி 

அன்றியிப் பூவில் அமிர்த சஞ்சீவி! 

அவளைத் தள்ளுபவன் ஒரு பாவி. நல்ல

bottom of page