top of page

54. ஆசீர்வதியும் கர்த்தரே

ஆசீர்வதியும் கர்த்தரே! ஆனந்த மிகவே 

நேசா உதியும் சுத்தரே! நித்தம் மகிழவே 

வீசிரோ வான ஜோதி கதிரிங்கே 

மேசியா எம் மணவாளனே 

ஆசாரியரும் வான் ராஜனும் 

ஆசீர்வதித்திடும். 


இம்மண வீட்டில் வந்திடும் 

ஏசு மா ராயரே! 

உம் மணம் வீசச் செய்தீரோ, 

ஓங்கும் நேசமதால், 

இம்மண மக்கள் மீதிறங்கிடுவீர் 

இவ்விருபேரையும் காக்கவே, 

விண்மக்களாக நடக்கவே 

வேந்தா நடத்துமே. 


இம்மண மக்களோடென்றும் 

என்றென்றும் தங்கிடும், 

உம்மைக் கண்டும் பின்சென்றும் 

ஓங்கச் செய்திடுமே. 

இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே 

இன்பத்தோடன்பாக்கிய சூட்சமே 

உம்மிலே தங்கித் 

தரிக்க ஊக்கம் அருளுமே.

bottom of page