top of page

55. பரிசுத்த அக்கினி அனுப்பும்

பரிசுத்த அக்கினி 

அனுப்பும் தேவா! 

பரந்து ஜூவாலிக்கக் 

கொளுத்தும் தேவா 


இரக்கமாய் அக்கினித் 

தழலைக் கொண்டு 

உருக்கமாய், உள்ளத்தைத் 

தொட்டருளும். 

- பரிசுத்த அக்கினி  


தேச மெங்கும், திவ்ய 

அக்கினியால் தீவினை யாவையும் 

சுட்டெரிக்க 

- பரிசுத்த அக்கினி 


கன்னிகை விருத்தர் 

வாலிபரும் 

உன்னத ஆவியால் 

நிரம்பிடவும் 

- பரிசுத்த அக்கினி 


பாவிகள் யாவரும் 

மனந்திரும்பப் 

பரலோக அக்கினி 

நாவருளும் 

- பரிசுத்த அக்கினி 


இயேசுவின் பேரன்பை 

உணர்ந்து விசு 

வாசத்தில் யாவரும் 

வளர்ந்திடவே

- பரிசுத்த அக்கினி 

bottom of page