top of page

56. கர்த்தர் மேல் பாரத்தை

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு 

கலங்கித் தவிக்காதே. 

அவரே உன்னை ஆதரிப்பார், 

அதிசயம் செய்வார். 


நீதிமான் தள்ளாட விடமாட்டார் 

நித்தமும் காத்து நடத்திடுவார் 

-  கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு  


நம்மைக் காக்கும் தேவனவர் 

நமது நிழலாய் இருக்கின்றவர் 

-  கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு  


தகப்பனும் தாயும் கைவிட்டாலும் 

அவரே நம்மை அணைத்துக் கொள்வார் 

-  கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு  


கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது 

நமக்கு எதிராய் நிற்பவர் யார்? 

-  கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு  


வாழ்க்கைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம் 

அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்.

-  கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு 

bottom of page