top of page

57. கால் மிதிக்கும் தேசம்

கால் மிதிக்கும் தேசம் எல்லாம் என் 

கர்த்தருக்குச் சொந்தமாகும் 

கண்பார்க்கும் பூமியெல்லாம் 

கல்வாரிக் கொடி பறக்கும். 


பறக்கட்டும் பறக்கட்டும் 

சிலுவையின் ஜெயக்கொடி அல்லேலூயா 

உயரட்டும் உயரட்டும் 

இயேசுவின் திருநாமம் அல்லேலூயா 

- கால் மிதிக்கும் தேசம் எல்லாம்


எழும்பட்டும் எழும்பட்டும் 

கிதியோனின் சேனைகள் அல்லேலூயா 

முழங்கட்டும் முழங்கட்டும் 

இயேசுதான் வழியென்று அல்லேலூயா 

- கால் மிதிக்கும் தேசம் எல்லாம்


செல்லட்டும் செல்லட்டும் 

ஜெபசேனை துதிசேனை அல்லேலூயா 

வெல்லட்டும் வெல்லட்டும் 

எதிரியின் எரிகோவை அல்லேலூயா 

- கால் மிதிக்கும் தேசம் எல்லாம்

bottom of page