top of page
58. ஏசு ஸ்வாமி! அருள்
இயேசு சுவாமி! அருள் நாதா!
கெஞ்சிக் கேட்கிறேன்,
பாவி யெனைக் கைவிடாமல்,
சேர்த்துக் கொள்ளுமே.
ஏசு சுவாமி! கெஞ்சிக் கேட்கிறேன்.
பாவியேனைக் கைவிடாமல், சேர்த்துக் கொள்ளுமே.
கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்,
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்.
தீய குணம் க்ரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்.
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன்.
தூய ரத்தத்தாலே என்னைச்
சுத்தமாக்குவீர்.
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்.
bottom of page