61. இயேசுவை நம்பினோர்

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை 

என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும் 

சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார் 

பங்கம் வராதென்னை ஆதரிப்பார். 


நெஞ்சமே நீ அஞ்சிடாதே 

நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே 

இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் 

இன்னமும் காத்துன்னை நடத்துவார் 


நாசியில் சுவாசமுள்ள மாந்தரை 

நம்புவதல்ல தம் ஆலோசனை 

கோர பயங்கர காற்றடித்தும் 

கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும். 


அங்கே அநேக வாசஸ்தலங்கள் 

அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே 

நேர்த்தியான இடங்களில் உன்றன் 

நித்திய பங்கு கிடைத்திடுமே.