top of page

65. இயேசுதானே அதிசய

இயேசு தானே அதிசய தெய்வம்

இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் (2)


அதிசயமே அவர் அவதாரம்

அதிலும் இனிமை அவர் உபகாரம்

அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்

அவரில் நிலைதிருப்பதே என் சிலாக்கியம்.

- இயேசு தானே அதிசய தெய்வம்


இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே

இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே

அந்தரத்தில் அழுது நீ ஜெபித்தால்

அவர் கரத்தால் முகம் தொட்டுத் துடைப்பார்

- இயேசு தானே அதிசய தெய்வம்


மனிதன் மறு பிறப்படைவதவசியம்

மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்

மறையுமுன்னே மகிபனைத் தேடு

இறைவனோடு பரலோகம் சேரு

- இயேசு தானே அதிசய தெய்வம்

bottom of page