68. இஸ்ரவேல் என் ஜனமே

இஸ்ரவேல் என் ஜனமே

என்றும் இடறிட வேண்டாம்

யேகோவா உன் தெய்வமானால்

ஏதும் பயம் வேண்டாம்.


ஓங்கும் புயமும் பலத்த கரமும்

உன் பக்கமே உண்டு.

தாங்கும் கிருபை தயவு இரக்கம்

தாராளமாய் உண்டு

- இஸ்ரவேல் என் ஜனமே


பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட

பஸ்கா ஆட்டுக்குட்டி.

ஆரோன் மோசே என்னும் நல்ல

ஆசாரியர் உண்டு

- இஸ்ரவேல் என் ஜனமே


செங்கடலில் வழி திறந்த

சீயோன் நாயகனே.

பங்கமின்றி பாலைவனத்தில்

பராமரித்தாரே

- இஸ்ரவேல் என் ஜனமே


பயப்படாதே, சிறு மந்தையே!

அவரே உன் மேய்ப்பர்.

தயங்காதே, மனம் கலங்காதே உன்

தேவன் தினம் காப்பார்

- இஸ்ரவேல் என் ஜனமே