top of page
70. துதிப்போம் அல்லேலூயா
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை.
தேவன் என்னில் வந்தடையச் செய்தார்.
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்.
அற்புதங்கள் செய்யும்
சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார்
- துதிப்போம் அல்லேலூயா பாடி
அஞ்சிடேன் இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்
- துதிப்போம் அல்லேலூயா பாடி
தேவன் எந்றன் அடைக்கலமாமே.
ஒருபோதும் பொல்லாப்பு வராதே.
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்று
விடுவித்து காத்திடுவார்
- துதிப்போம் அல்லேலூயா பாடி
கூப்பிடும் வேளைகளில் என்னைத்
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்.
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன்
- துதிப்போம் அல்லேலூயா பாடி
bottom of page