top of page

71. கிறிஸ்துவின் வீரரே நீங்கள்

கிறிஸ்துவின் வீரரே நீங்கள் 

எழுந்து வாருங்கள் 

சத்தியத்தின் ஒளி கொடுக்க 

விரைந்து வாருங்கள் 

ஏசு சேனை வீரர்கள் நாம் 

முன்னேறிச் செல்வோம் 

சிலுவைக் கொடி ஏந்தியே நாம் 

சாத்தானை வெல்வோம் 


ஒளி வந்தது, நீ எழும்பிப் பிரகாசி 

நாளையல்ல இன்றைய தினமதிலே 

கிருபையின் நாள், தவணையின் நாள்,

கர்த்தர் ஏசு பரிந்துரைக்கும் 

கடைசியான நாள் 

- கிறிஸ்துவின் வீரரே நீங்கள் 


கெர்ச்சிக்கும் சிங்கமவனை 

அடித்து வீழ்த்துவோம் 

கெத்சேமனே அனுபவம் பெறுவோம் 

யூத சிங்கமே, நம் ராஜ ராஜரே 

யுகம் எங்குமே வழி நடத்த 

முன்னேறிச் செல்வோம் 

- கிறிஸ்துவின் வீரரே நீங்கள் 


நாடு நகரம் கிராமம் வீதி 

அலைந்து செல்லுவோம் 

காடு மலைகள் பள்ளத்தாக்கில் 

விரைந்து செல்லுவோம் 

எவருக்கும் அஞ்சிடோம்  

கர்த்தர் ஏசு வருவாரென்று 

தூது சொல்லுவோம்

- கிறிஸ்துவின் வீரரே நீங்கள் 

bottom of page