top of page

73. எண்ணி எண்ணித் துதி செய்வாய்

எண்ணி எண்ணித் துதி செய்வாய்,

எண்ணடங்காத கிருபைக்களுக்காய்

இன்னும் தாங்கும் தம் புயமே,

இன்ப இயேசுவின் நாமமே

- எண்ணி எண்ணித் துதி செய்வாய் 


உன்னை நோக்கும் எதிரியின்

கண்ணின் முன்பில் பதறாதே

கண்மணி போல் காக்கும் கரங்களில்

உன்னை மூடி மறைத்தாரே

- எண்ணி எண்ணித் துதி செய்வாய்


யோர்தான் புரண்டு வரும்போல்

எண்ணற்ற பாரங்களோ?

எலியாவின் தேவன் எங்கே

உந்தன் விசுவாச சோதனையில்

- எண்ணி எண்ணித் துதி செய்வாய்


உனக்கெதிராகவே

ஆயுதம் வாய்க்காதே

உன்னை அழைத்தவர் உண்மை தேவன்

அவர் தாசர்க்கு நீதியாவார்

- எண்ணி எண்ணித் துதி செய்வாய்

bottom of page