top of page

78. வல்லமை தேவை தேவா

வல்லமை தேவை தேவா

வல்லமை தாரும் தேவா

இன்றே தேவை தேவா

இப்போ தாரும் தேவா


பொழிந்திடும் வல்லமை

உன்னதத்தின் வல்லமை

ஆவியின் வல்லமை

அக்கினியின் வல்லமை

- வல்லமை தேவை தேவா


மாம்சமான யாவர் மீதும்

ஆவியை ஊற்றுவேன் என்றீர்

மூப்பர் வாலிபர் யாவரும்

தீர்க்கதரிசனம் சொல்வாரே

- வல்லமை தேவை தேவா


பெந்தேகோஸ்தே நாளைப் போல

பெரிதான முழக்கத்தோடு

வல்லமையாக இறங்கி

வரங்களினாலே நிரப்பும்

- வல்லமை தேவை தேவா


மீட்கப்படும் நாளுக்கென்று

முத்திரையான ஆவியைத் தாரும்

பிதாவே என்று அழைக்க

புத்ர சுவிகாரம் ஈந்திடும்

- வல்லமை தேவை தேவா

bottom of page