top of page

79. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் 

மறைந்து விடும்


கலங்காதே மகனே, கலங்காதே மகளே

உன் நேசர் கைவிட மாட்டார்


நடந்ததை நினைத்து கலங்காதே

கஷ்டத்தை மறந்துவிடு

கர்த்தர் புதியன செய்திடுவார்

இன்றே நீ காண்பாய்(2)

கலங்கிடவே வேண்டாம்(2)

உன் நேசர் கைவிட மாட்டார்


நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்

உடைந்த உள்ளம் தாங்குகிறார்

காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்

உன் கண்ணீர் துடைகின்றார்(2)

கலங்கிடவே வேண்டாம்(2)

உன் நேசர் கைவிட மாட்டார்


திராணிக்கு மேலாக சோதிக்கப்பட

ஒருநாளும் விட மாட்டார்

தாங்கிட பெலன் தருவார்

தப்பி செல்ல வழி செய்வார் (நீ தப்பி செல்ல)

கலங்கிடவே வேண்டாம்(2)

உன் நேசர் கைவிட மாட்டார்

bottom of page