top of page
8. பரிசுத்த ஆவி எங்கள் மீதிலே
பரிசுத்த ஆவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே
இம்மண்டலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பிடும்
அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி
அந்தகாரத்தை நீக்கிவிடும்
தேவ செய்தி அளிக்க விரும்பும்
தேவ பிள்ளையிப் பெலப்படுத்தும்
தேவ லோகத்தின் இரகசியங்களை
தேவா எங்களுக்கு வெளிப்படுத்தும்
பேயின் சக்தி தகர்த்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும் பெலன் அருளும்
வரம் தந்தெம்மை அபிஷேகியும்
bottom of page