top of page
80. தாசரே இத்தரணியை
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்
வருத்தப்பட்டு பாரம் சுமந்தோரை
வருந்தி அன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் ஏசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை, நமது துன்பத்தைச்
சுமந்து தீர்த்தாரே
- தாசரே இத்தரணியை அன்பாய்
பசியுற்றோர்க்கு, பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து,
தமை மறந்து ஏசு கனிந்து
திரிந்தனரே
- தாசரே இத்தரணியை அன்பாய்
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள்
விழுந்தனரே
- தாசரே இத்தரணியை அன்பாய்
இந்து தேச மாது சிரோமணிகளை
விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்.
சுந்தரக் குணங்களடைந்து,
அறிவிலுயர்ந்து, நிர்ப்பந்தங்கள் தீர்ந்து
சிறந்திலடங்கிட
- தாசரே இத்தரணியை அன்பாய்
bottom of page