top of page

81. அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

இந்த லேசான உபத்திரவம்

சோர்ந்து போகாதே – நீ

சோர்ந்து போகாதே


உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்

புதிதாக்கப்படும் இந்த வேளை இது - (2)


ஈடு இணையில்லா மகிமை

இதனால் நமக்கு வந்திடுமே - (2)


காண்கின்ற உலகம் தேடவில்லை

காணாத பரலோகம் நாடுகிறோம் - (2)


கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்

பாக்கியம் நமக்கு பாக்கியமே - (2)


மன்னவர் இயேசு வருகையிலே

மகிழ்ந்து நாமும் களிகூருவோம் - (2)

bottom of page