top of page

82. ஏழை மனு உருவை

ஏழை மனு உருவை எடுத்த

ஏகராஜன் உன்னண்டை நிற்கிறார்

ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே.


கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ

கடும் முள்முடி பொன்சிரசில் சூடிட

கந்தையும் நிந்தையும்

வேதனையும் சகித்தார்

சொந்தமான இரத்தம்

சிந்தினார் உனக்காய்க்

கனிவுடனே உன்னை அழைக்கிறாரே

- ஏழை மனு உருவை எடுத்த


அவர் தலையையும்

சாய்க்கவோ ஸ்தலமுமில்லை

அன்று தாகத்தைத்

தீர்க்கவோ பானமுமில்லை

ஆறுதல் சொல்லவோ அங்கு

ஒருவரில்லை

அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே

அந்தப்பாடுகள் உன்னை மீட்கவே

- ஏழை மனு உருவை எடுத்த


மாயை உலகம் அதையும் நம்பாதே

மனுமக்கள் மனமும் மாறிப்போகுமே

நித்திய தேவனை நேசித்தால் இப்போதே

நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ

நம்பிக்கையோடே வந்திடுவாய்

- ஏழை மனு உருவை எடுத்த


இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே?

இன்ப ஏசுவண்டை எழுந்து வாராயோ

இந்த உலகம் தரக்கூடாதச் சமாதானத்தை

இன்று உனக்குத் தரக்காத்து நிற்கிறாரே

அண்ணல் ஏகன்னை அழைக்கிறாரே

- ஏழை மனு உருவை எடுத்த

bottom of page