top of page

83. வேலை நாள் ஆறும் சென்று ஓய்வுநாள்

வேலைநாள் ஆறும் சென்று ஓய்வுநாள் 

ஆரம்பமாயிற்றே என் நெஞ்சமே 

பேராசீர் நாளாம் இதில் ஓய்ந்திட 

எழுந்திடாயோ? ஆ! என் நெஞ்சமே 


ஆதி ஆறு நாள் அகிலத்தையும் 

அண்ட சராசரம் அனைத்தையும் 

ஆண்டவர் ஆக்கி ஏழாம் நாளையே 

ஓய்ந்தாசாரித்தார் நினை நெஞ்சமே 


சீனாய் மலைமேல் கர்த்தர் கற்பித்தார் 

பூதலம் உற்ற போதும் ஓய்ந்தார் காண்;

தீர்க்கர் பிதாக்கள், வேத பக்தர்கள் 

ஓய்ந்தார் இந்நாளே ஆதி முதலாய் 


தெய்வாசீர்வாதம் வாய்ந்த ஓய்வுநாள் 

படைப்பு மணம் கமழ் ஓய்வுநாள்

இம்மை மறுமை மாறா ஓய்வு நாள் 

மெய் இஸ்ரவேலர் சபை கூடும் நாள் 


லெளகீக வேலை தொழில் அகற்றி 

தெய்வ முகம் திரும்பு நெஞ்சமே

மாண்டி விழுந்து நாமம் போற்றியே 

ஜெபித்துத் தேடு அவர் ஆசியை 

bottom of page