top of page
85. நான் இயேசுவின் ஒளியில்
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
இராப்பகலை ஒழுங்காய்க் கடக்கிறேன்
என்றும் நடக்கிறேன் பின்திரும்பேனே
இயேசு ரட்சகர் பின்னே.
நடக்கிறேனே இரட்சகருடனே
கடக்கிறேனே கரம் பிடித்தே
விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே
ஒளியில் நடக்கிறேன்
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் காரிருள் மூடினும் பயப்படேன்.
சீயோன் கீதம் பாடிச் செல்வேனே
ஆயன் இயேசுவின் பின்னே.
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்
வீண்பாரங்களை விடுகிறேனே
என் இயேசுவின் பின்னே.
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
முன்னோடிகள் அவரை நோக்குகிறேன்
என் சிலுவையை எடித்துச் செல்வேனே
என் இயேசுவின் பின்னே.
bottom of page