top of page
86. கர்த்தரின் சந்நிதி இன்று
கர்த்தரின் சந்நிதி இன்று
நாம் கூடினோம்
அவரின் பிரசன்னத்தில் தேடினோம்
இங்கே நாம் அவரின்
அன்பிலே மூழ்கினோம்
அவரை அண்டியே செல்லுவோம்
கர்த்தர்தான் என் ஒளி
நான் இன்று மகிழ்வேன்
அவர்க்கென்று ஒளி வீசுவேன்
ஆ! அவ்வன்பேன்றுமே
என்னை ஆட்கொள்ளுமே
அவரில் என்றுமே பூரிப்பேன்
ஆ! இந்த பூவிலே ஆண்டவர்க்
கென்றென்னை
அடிமையாகவே ஈவேனே
அவரின் காணிக்கை
என் ஜீவன் என் ஆஸ்தி
எல்லாம் அவர்க்கென்று ஈவேனே
இங்கே நாம் கூடினோம்
கெம்பீரம் கொள்ளுவோம்
பரத்தில் நம் ஆஸ்தி மிகுதி
ஆ! அந்த வீட்டையே
நாடியே சேல்லுவேன்;
அதுவே என்றென்றும் என் கதி
bottom of page