top of page

91. கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன்

மாமேரு நேராய் என்

கண்களை ஏறெடுப்பேன்.

விண்மண் உண்டாக்கிய

வித்தகனிடமிருந்து

எண்ணில்லா ஒத்தாசை

என்றனுக்கே வரும்.


காலைத் தள்ளாட வொட்டார்

உறங்காது காப்பவர்

காலைத் தள்ளாட வொட்டார்

வேலையில் நின்று 

இஸ்ரவேலரைக் காத்தவர்

காலையும் மாலையும் கன்னுரண்காதவர்

- கண்களை ஏறெடுப்பேன்


பக்தர் நிழல் அவரே எனை ஆதரித்திடும்

பக்தர் நிழல் அவரே,

எக்கால நிலைமையில்

எனைச் சேதப்படுத்தாது

அக்கோலம் கொண்டோனை

அக்காலம் புரியவே

- கண்களை ஏறெடுப்பேன்


எல்லாத் தீமைகட்கும்

என்னை விலக்கியே

எல்லாத் தீமைகட்கும்

பொல்லா உலகினில்

போக்குவரத்தையும்

நல்லாத்துமாவையும்

நாடோறும் காப்பவர்

- கண்களை ஏறெடுப்பேன்

bottom of page