top of page
92. நான் பாவிதான் ஆனாலும்
நான் பாவிதான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தஞ் சிந்தினீர்;
"வா" என்று என்னைக் கூப்பிட்டீர்;
என் மீட்பரே, வாறேன், வாறேன்.
நான் பாவிதான் என் நெஞ்சிலே
கறை பிடித்திருக்குதே;
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வாறேன், வாறேன்.
நான் பாவிதான் பயத்தினால்
திகைத்து, பாவப் பாரத்தால்
அலைந்து மாண்டு போவதால்
என் மீட்பரே, வாறேன், வாறேன்.
நான் பாவிதான் இரங்குவீர்
அணைத்துக் காத்து ரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வாறேன், வாறேன்.
நான் பாவிதான் அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்;
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வாறேன், வாறேன்.
bottom of page