top of page

93. நம்பி வந்தேன்

நம்பி வந்தேன் மேசையா,

நான் நம்பி வந்தேனே – திவ்ய

சரணம்! சரணம்! சரணம்! ஐயா,

நான் நம்பி வந்தேனே.


தம்பிரான் ஒருவனே,

தம்பமே தருவனே – வரு

தாவீது குமரகுரு பரமனுவேலே,

நம்பி வந்தேனே

- நம்பி வந்தேன் மேசையா


நின் பாத தரிசனம்

அன்பான கரிசனம் – நிதம்

நிதசரி தொழுவது இதம் எனும்

உறுதியில் நம்பி வந்தேன்

- நம்பி வந்தேன் மேசையா


நாதனே, கிருபை கூர்; வேதனே

சிறுமை தீர்; – அதி

நலம் மிகும் உனதிரு திருவடி

அருளை நம்பி வந்தேனே

- நம்பி வந்தேன் மேசையா


பாவியில் பாவியே – நான்

கோவியில் கோவியே – கன

பரிவுடன் அருள்புரி, அகல விடாதே

நம்பி வந்தேனே

- நம்பி வந்தேன் மேசையா


ஆதியில் ஓலோலமே,

பாதுகாகாலமே – உன

தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த

நம்பி வந்தேன்

- நம்பி வந்தேன் மேசையா

bottom of page