top of page

94. பாடித் துதி மனமே பரனைக் கொண்டு

பாடித் துதி மனமே, பரனைக் கொண்டு

ஆடித் துதி தினமே;


நீடித்த காலமதாகப் பரன் எமை

நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்


தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்

செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்

மார்க்கம் அதாகக் குமாரனை கொண்டு

வழுத்தின அன்பை விழித்துத்

தியானித்து

- பாடித் துதி மனமே


எத்தனைத் தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்

எத்தனைப் போதகர்கள், இரத்தச்சாட்சிகள்

எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்து

இத்தனையாய் க்ருபை

வைத்த நம் கர்த்தனைப்

- பாடித் துதி மனமே

bottom of page