top of page
95. என் மீட்பரின் ரத்தத்தினாலே
என் மீட்பரின் ரத்தத்தினாலே
நான் பூரண மீட்படைந்தேன்
ஒப்பற்ற மா கிருபையாலே
நான் கர்த்தரின் பிள்ளையானேன்
மீட்டார்…. மீட்டார்….
தம் ரத்தத்தால் என்னை மீட்டார்
மீட்டார்….. மீட்டார்….
இப்பாவியை ஆளாக்கினார்.
என் உள்ளத்தில் வாக்குக் கெட்டாத
சந்தோஷத்தை தந்து விட்டார்
என்னோடவர் தங்க, நீங்காத
பேரானந்தம் பொங்கச் செய்வார்
ரட்சா பெருமானை ஓயாமல்
தியானிப்பேன் ரம்மியமாய்
பேரன்பையே இடைவிடாமல்
நான் போற்றுவேன் மகிழ்ச்சியாய்
மா வேந்தனாம் என்றன் ராஜாவை
நான் சீக்கிரம் கண்டு கொள்வேன்
அன்பாய் என்னை காக்கும் கர்த்தாவைச்
சதா காலம் ஸ்தோத்தரிப்பேன்
bottom of page