top of page
96. கிருபையிதே தேவ கிருபையிதே
கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன்நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்.
ஆருயிர் அன்பராம் எங்களுடனே
ஜீவிய பாதையிலே – இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே
- கிருபையிதே தேவ கிருபையிதே
வார்த்தையினால் அவர் தீர்த்தார் என்றன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக்காருமில்லை
- கிருபையிதே தேவ கிருபையிதே
நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் பெற்றிடவே
விசுவாசத்தால் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக்
காத்துக் கொள்வோம்
- கிருபையிதே தேவ கிருபையிதே
bottom of page