top of page
97. வான பிதா தந்த வேத
வான பிதா தந்த வேதத்திலே
நான் மகிழ்வேன் அன்பு சொல்லுகிறார்;
இவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே
ஆச்சர்யம் ஏசென்னை நேசிக்கிறார்.
ஆனந்தம் ஏசு நேசிக்கிறார்!
நேசிக்கிறார்! நேசிக்கிறார்!
ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!
நேசிக்கிறார் என்னையும்.
நான் மறந்தோடினும் நேசித் தென்னை
சென்ற இடம் வந்து தேடுகிறார்;
மீண்டும் நினைத்தவர் நேசந்தன்னை
ஆண்டவர் அண்டுவேன், நேசிக்கிறார்.
மா ராஜர் வானுயர் தோற்றத்திலே
கீதம் இதே என்றும் பாடிக் கொள்வேன்;
என் துதி நித்திய காலத்திலே
ஆச்சர்யம், ஏசென்னை நேசிக்கிறார்.
நேசிக்கிறார், நானும் நேசிக்கிறேன்
மீட்க வந்தாத்துமம் நேசிக்கிறார்;
சாவு மரத்தில் அந்நேசங் கண்டேன்;
நிச்சயம் ஏசென்னை நேசிக்கிறார்.
bottom of page